தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அபார வெற்றி! தொடர்ந்து கம்பீரமாக முதலிடத்தில் இருக்கும் இந்தியா
ராஞ்சியில் நடைபெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
கடந்த சனிக்கிழமையன்று துவங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 212 மற்றும ரஹானே 115 ரன்கள் விளாசி அசத்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாலோ ஆன் ஆன தென்னாப்பிரிக்கா அணியை இரண்டாவது இன்னிங்சை ஆட இந்திய அணி அழைத்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்கிஸிலும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தனர்.
இன்று நான்காவது நாள் ஆட்டத்தில் நதீம் வீசிய இரண்டாவது ஓவரிலேயே தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் ப்ரையன் மற்றும் நிகிடி அடுத்ததடுத்து விக்கெட்டினை பறிகொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இதுவரை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று 240 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் தலா 60 புள்ளிகளுடன் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உள்ளன.