தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்.! மொத்த விக்கெட்டுகளையும் வாரிச்சுருட்டிய ஆஸ்திரேலிய அணி.!
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல்நாள் ஆட்டம் மழையால் பாதியில் பாதிப்படைந்தது. இதனால் சிறிது நேரம் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து மழை நின்று மீண்டும் போட்டி தொடர்ந்தது. இதனையடுத்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தது. இந்தநிலையில், நேற்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது.
நேற்றைய தினம் 105.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சைனி மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து இன்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில், ரஹானே 70 பந்துகளுக்கு 22 ரன்கள் எடுத்தநிலையில் போல்டானார். இதனையடுத்து களமிறங்கிய விஹாரி 4 ரன்களும், ரிஷப் பந்த் 36 ரன்களும், புஜாரா 50 ரன்களும், அஸ்வின் 10 ரன்களும், சைனி 3 ரன்னும், பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும், சிராஜ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜடேஜா 28 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் இந்திய அணி 100.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில், புஜாரா ஆகியோர் தலா 50 ரன்கள் எடுத்தனர்.