மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏமாற்றம் அளித்த இந்திய அணி; 4-வது டெஸ்டில் தோல்வியடைந்து தொடரை இழந்தது
இங்கிலாந்து – இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. பௌலிங்கில் மிக சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இந்த ஆட்டத்தில் வென்று தொடரை நிச்சயம் சமன் செய்யும் என்று அனைவரையும் எதிர்பார்க்க வைத்தது.
ஆனால் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 184 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற முன்னிலையில் இங்கிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது இனிங்சின் ஆரம்பத்திலே இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. 22 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அரை சதம் அடித்த க்ஹோலி மெயின் அலி பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாண்டிய மற்றும் பண்ட் வந்த வேகத்திலே நடையை கட்டினர். பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும், பண்ட் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்தியாவின் தோல்வி உறுதியானது.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 184 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.
புஜாராவை 5 ரன்னிலும், ஷிகர் தவானை 17 ரன்னிலும் வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் கோஹ்லி மற்றும் ரஹானே அரை சதம் அடித்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு வந்த அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய தோல்வி உறுதியானது.