மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்னும் இரண்டு நாட்களில் 14 விக்கெட்டுகள்; சாதிக்குமா இந்தியா!
சிட்னியில் நடைபெற்று வரும் இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 14 விக்கெட்டுகள் தேவை.
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்று செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து நேற்று டிக்ளேர் செய்தது. புஜாரா 193, பண்ட் 159, ஜடேஜா 81, விஹாரி 77 ரன்கள் எடுத்தனர். பின்னர் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 24 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று துவங்கிய மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர்கள் தங்களது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் இவர்களது விக்கெட்டை பெறமுடியவில்லை. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 22 ஆவது ஓவரில் கவாஜா 27 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லாபஸ்ஜெய்ன், மார்கஸ் ஹாரிசுடன் இணைந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மற்றொரு முனையில் சிறப்பாக ஆடிவரும் மார்க்கஸ் ஹாரிஸ் தனது அரைசதத்தை கடந்தார். இந்நிலையில் மூன்றாவது நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 122 ரன்கள் எடுத்தது.
ஆனால் உணவு இடைவேளளைக்குப் பின்னர் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. 43 ஆவது ஓவரில் ஹாரிஸ் 79, 49 ஆவது ஓவரில் மார்ஷ் 8 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து லாபஸ்சாக்னே 38 ரன்னில் சமி பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் சிறிது நேரம் ஹான்ஸ்கோம்புடன் சேர்ந்து நிதானமாக ஆடிய ஹெட் 20 ரன்னிலும், கேப்டன் பெய்ன் 5 ரன்னிலும் குலதீப் யாதவ் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. ஹான்ஸ்கோம்ப் 28, கம்மின்ஸ் 25 ரன்களில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி 386 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணியை முதல் இன்னிங்சில் பாலே ஆன் ஆக செய்து, மீண்டும் ஆஸ்திரேலியா அணியை ஆல் அவட் செய்தாலே இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவ்வாறு இல்லாமல் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆடும் நிலை உருவானால் ஆட்டம் டிராவில் முடியவே வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 14 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.