மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடந்த டி20 உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தின் வேதனை.! இந்த வருடமும் பாகிஸ்தானுடன் தான்.! சாய்க்குமா இந்திய வேங்கைகள்.!
2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா உள்பட 12 அணிகள் நேரடியாக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றிபெற்று குரூப் சுற்றுக்குள் நுழைய உள்ளன.
இந்நிலையில், ஐஐசி 20 டி உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது. அதேபோல், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி அக்டோபர் 23-ல் மெல்பெர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது. 2021 உலகக்கோப்பையிலும் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானையே எதிர்கொண்டது. உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை பாகிஸ்தான் அந்த போட்டியில் வீழ்த்தியிருந்தது. இப்போது மீண்டும் அடுத்த உலகக்கோப்பையிலேயே இரண்டு அணிகளும் தங்களின் முதல் போட்டியிலேயே மீண்டும் மோதவிருக்கின்றனர்.