மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தாடி என்னவொரு வெறித்தனம்.... இந்திய அணியின் ஆக்ரோஷம்.! முதல் மூன்று ஓவர்களில் 5 விக்கெட்டுகள்.! சிக்கி தவிக்கும் தென் ஆப்பிரிக்கா
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளாவின் கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி ஒருமுறை கூட வென்றதில்லை என்பதால் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்ற தீவிர முனைப்புடன் ஆடும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்தநிலையில் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை துவங்கியது. ஆரம்பத்திலே இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாகரின் சிறப்பான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் முதல் மூன்று ஓவர்களிலே அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து முதல் மூன்று ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து திணறி ஆடி வருகின்றனர்.
தற்போது 11 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி ஆடி வருகின்றனர். இந்திய அணியின் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுக்களையும், தீபக் சாகர் 2 விக்கெட்டுக்களையும், ஹர்சல் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தி சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.