#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வாழ்வா-சாவா ஆட்டம்.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழந்து விடும். எனவே இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா-சாவா ஆட்டமாக இருக்கும்.
முதல் 2 ஆட்டங்களில் கண்ட வெற்றி உற்சாகத்துடன் களம் காணும் தென்ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். எனவே இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.