சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
கடைசி டெஸ்ட்: அஸ்வின் நீக்கம்; மீண்டும் சொதப்பிய ராகுல்; வரலாறு படைக்குமா இந்தியா!
இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் இன்று சிட்னியில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் புதிய சாதனையை படைக்கும்.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே சிட்னியில் இன்று துவங்கியுள்ள ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த முறை அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ராகுல் மீண்டும் தனது வாய்ப்பை தவறவிட்டுள்ளார் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுல் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி நேர நிலவரப்படி இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் அகர்வால்28 ரன்களுடனும் புஜாரா 12 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
காயம் காரணமாக ஓய்வில் இருந்த அஸ்வினுக்கு இந்த ஆட்டத்திலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வின் கடைசி போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஜடேஜாவுடன் சேர்த்து இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ராகுல், மாயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா.