தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
86 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்த இந்திய அணி!.
இந்திய அணி ஹாக்கி போட்டியில் அபார சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில், இந்திய அணி 26-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி அபாரமாக வென்றது. ஒரே போட்டியில் இந்தியா 26 கோல்கள் அடித்துள்ளதன் மூலம் 86 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 1932ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்திய அணி, 24 கோல்களை அடித்து அமெரிக்கா அணியை வீழ்த்தி அபாரமாக வென்றது. இதுவே இதுநாள் வரை சாதனையாக இருந்தது.
தற்போது நடைபெற்று வரும் ஆசியப் போட்டியில் இந்திய அணி மொத்தம் 43 கோல்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய ஹாக்கி அணி மேலும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.