'சாம்சனுக்கு அந்த கொடுப்பினை இல்ல போல' நேற்றைய போட்டியிலேயே கைமாறிய ஆரஞ்சு தொப்பி.!



ipl-2019---orange-cape-change--sanchu-samson-to-warner

நேற்றைய ஐபிஎல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், சன் ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது. இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவின. இன்றைய போட்டியில் எந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணியின் துவக்க மட்டையாளர்கள் ரஹானே மற்றும் பட்லர் களமிறங்கினர். 

IPL 2019

பட்லர் ஆரம்பத்திலே அவுட் ஆன நிலையில் அடுத்ததாக இறங்கிய சாம்சன் அதிரடியாக விளையாடினார். ரஹானே, சாம்சன் இருவரும் ஜோடி சேர்ந்து 122 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த ரஹானே மூன்று சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

4 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 55 பந்துகளில் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

IPL 2019 

இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைஸர்ஸ் ஹைதெராபாத் அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பேர்ஸ்ட்டோ ,ராஜஸ்தான் அணியினரின் பந்துவீச்சை பறக்கவிட்டனர். வார்னர் 37 பந்துகளில் 69 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

19 -வது ஓவரின் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஐபில் தொடரில் யார் அதிக ரன்களை அடித்துள்ளனரோ அவர்கள் தான் ஆரஞ் தொப்பியை அணிந்திருப்பார்கள். இந்தநிலையில் சாம்சன் சதம் அடித்த நிலையில் 2019 ஐபில் தொடரில் அதிகபட்சமாக சாம்சன் 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆரஞ் தொப்பி சாம்சன் அணிந்திருந்தார்.

IPL 2019

ஆனால் அடுத்ததாக களமிறங்கிய ஹைதெராபாத் அணியின் வார்னர் 37 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த நிலையில்,  2019 ஐபில் தொடரில் 154 ரன்கள் எடுத்து முதல் இடத்திற்கு சென்று ஆரஞ் தொப்பி வார்னருக்கு சென்றது.