தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
காசு இல்லீங்கோ..! 2020-ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை அதிரடி குறைப்பு!
ஐபிஎல் பரிசு தொகையை, சிக்கன நடவடிக்கையின் எதிரொலியாக பாதியாக பிசிசிஐ குறைத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பரிசுத் தொகையுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் பரிசு தொகை 50 சதவிகிதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் ரசிகர்கள் வரவேற்பு உள்ளது. இந்தியாவைப் போன்று மற்ற நாடுகளும் இதே போன்று வீரர்களை தேர்வு செய்து டி20 தொடரை நடத்தி வருகின்றன. ஆனால் ஐபிஎல் தொடர் போன்று மற்ற நாடுகளில் அந்தளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
பொதுவாக ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து மற்ற தொடர்களுக்கு சற்று வரவேற்பு குறைந்தது. ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு திருவிழா போன்று அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் வந்த பிறகுதான் பிற நாட்டு வீரர்களையும் பாராட்ட தொடங்கினர்.
இந்தநிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் 2020 சேம்பியன் கோப்பையை வெல்லும் அணிக்கு பத்து கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு இந்த பரிசுத் தொகை ரூ.20 கோடியாக இருந்தது.
பிசிசிஐ மேற்கொண்டு வரும் சிக்கன நடவடிக்கையால் தற்போது பரிசுகளில் மற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தநிலையில், இரண்டாவதாக வருகிற அணிக்கும் கடந்த முறை கொடுக்கப்பட்ட ரூ.12.5 கோடிக்கு பதிலாக, ரூ.6.25 கோடி பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.