#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐபில் 2020: அணிகளின் லேட்டஸ்ட் புள்ளி பட்டியல் விவரம்! எந்த அணி எந்த இடம்? இதோ முழு தகவல்!
ஐபில் 13 சீசன் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்துவருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் தொடங்க இருந்த ஐபில் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19 முதல் நடைபெற்றுவருகிறது.
இதுவரை 10 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் அணிகளின் தற்போதைய புள்ளிவிவரம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற நான்கு புள்ளிகளுடன் டெல்லி கேபிடல் அணி முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகள் மற்றும் நான்கு புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
ரன் ரேட் அடிப்படையில் டெல்லி அணி ராஜஸ்தான் அணியைவிட அதிகமாக இருப்பதால் டெல்லி அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதனை அடுத்து மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் 4 புள்ளிகளுடன் பெங்களூரு அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
தலா இரண்டு புள்ளிகளுடன் பஞ்சாப் அணி நான்காவது இடத்திலும், மும்பை அணி ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா அணி 6 வது இடத்திலும், சென்னை அணி ஏழாவது இடத்திலும் உள்ளது. இரண்டு போட்டிகளில் விளையாடி இதுவரை ஒரு போட்டிகளில் கூட வெற்றிபெறாத ஹைதராபாத் அணி புள்ளிகள் ஏதும் பெறாதநிலையில் புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.