#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பரபரப்பான ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் நீக்கம்! ரசிகர்கள் கவலை
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் இருந்து இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இதுவரை தலா ஒரு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 1-1 என சம நிலையில் உள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இந்த போட்டிக்கான 13 வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் நீக்கப்பட்டு கிரேக் ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த தொடரின் முதல் போட்டியிலேயே காயம் காரணமாக ஆண்டர்சன் 4 ஓவர்கள் மட்டுமே வீசினார். அதனை தொடர்ந்து ஓய்வில் இருந்த அவர் நான்காவது போட்டியில் ஆடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.