மழையின் கருணையால் புள்ளிபட்டியலில் தென்னாபிரிக்கா அணிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்



match-15-abandoned-due-to-rain

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 15 ஆவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் மே.இந்திய தீவுகள் அணி புள்ளிபட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளன.

இன்றைய போட்டியானது சௌதாம்ப்டனில் தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை ஆடிய ஆட்டத்தில் மூன்று தோல்விகளுடன் தடுமாறி வருகிறது. இன்றைய போட்டியிலாவது தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என தென்னாபிரிக்கா ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

wc2019

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பேட்டிங்கை செய்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்திலே சொதப்பிய படி ஆடியது. இந்த அணியின் துவக்க வீரர் ஆம்லா 7 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

அதனையடுத்து களமிறங்கிய எயிடன் மார்க்ராம் 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். துவக்க வீரராக களமிறங்கிய டீ காக் 21 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையிலும், ப்ளசிஸ் 7 பந்துகளுக்கு ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்தநிலையில் 8 வது ஓவர் நடைபெறும் பொழுது மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

wc2019

மழை இடைவிடாமல் பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இந்த உலகக்கோப்பையில் முடிவு தெரியாமல் மலையின் காரணமாக கைவிடப்படும் இரண்டாவது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டம் கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் வெற்றியை சந்திக்காத தென்னாபிரிக்கா அணிக்கு புள்ளிபட்டியலில் முதல் புள்ளி கிடைத்துள்ளது. இருப்பினும் புள்ளிபட்டியலில் ஆபிகானிஸ்தான் அணிக்கு முன்னர் 9 ஆவது இடத்தில் தான் தென்னாபிரிக்கா அணி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டும் இந்த ஒரு புள்ளியில் இரண்டு இடங்கள் முன்னேறி 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

wc2019