மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வார்னரை தட்டி தூக்கிய இந்திய அணியின் இளம் வீரர்.! மூன்றாவது டெஸ்டின் தற்போதைய நிலை.!
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில், 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக வில் புகோவ்ஸ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் 8 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் மட்டுமே எடுத்தநிலையில் முகமது சிராஜ் ஓவரில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
That's how Siraj Welcomed Warner 🔥#Miyan#AUSvIND pic.twitter.com/jIpL3Z0oXy
— Gulab Husain 🇮🇳 (@GULAB_HSN72) January 7, 2021
தற்போது 7.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்து ஆடிவரும் நிலையில் திடீரென மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது. தற்போது வில் புகோவ்ஸ்கி 14 ரன்கள் எடுத்தநிலையிலும், மார்னஸ் லபுஸ்சேன் 2 ரன்கள் எடுத்த இலையிலும் களத்தில் உள்ளனர்.