இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பற்றி கெத்தாக பேசிய மிதாலிராஜ்!



Midhali raj talk about womens cricket team

இந்திய மகளிர் அணியை எந்த எதிரணியும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை என மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் கூறியுள்ளார்.

இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் உலகக்கோப்பையை எப்படியாவது தன் தலைமையில் இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கிறார். இவர் தலைமையில் இந்திய அணி 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் இறுதிப்போடி வரை வந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியிடன் தோல்வியை சந்தித்தது.

Mithali raj

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய வீரர் தான் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மிதாலிராஜ். இவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், இந்திய மகளிர் அணியை முன்பு போல யாரும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. தங்களை நன்குத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவையும் டி20யில் இங்கிலாந்தையும் வீழ்த்தி மற்ற அணிகளுக்குச் சவாலை ஏற்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.

 இந்தநிலையில், எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் கூறியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு டி 20 கேப்டன் பொறுப்பில் இருந்து மிதாலி ராஜ் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.