தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை அணி சன்ரைசர்ஸ் அணியுடன் மோசமாக ஆடியது ஏன்.?
2020 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. அந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி இதற்க்கு முந்தய ஆட்டங்களில் ஆடியது போலவே ஆடவில்லை.
அந்த ஆட்டம் மும்பை அணிக்கு முக்கியம் இல்லாத ஆட்டம் தான். ஏனென்றால் அந்த ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியடைந்தாலும் புள்ளிபட்டியலில் மும்பை அணிதான் முதலிடம். இதனால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி அலட்டிக்கொள்ளாமல் ஆடி சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஆனால் மும்பை அணியின் பொல்லார்ட் மட்டும் சிறப்பாக ஆடி மும்பை அணியை மீட்டெடுத்தார். பொல்லார்ட் 41 ரன்கள் எடுத்து அவரும் போல்ட் ஆனார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. ஆனால் 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்த ஆட்டத்தில் மும்பை அணியின் தோல்விக்கு தாங்கள் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருக்கிறோம் என்ற மெத்தனபோக்கு தான் காரணம் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.