சிறப்பாக ஆடிய ஏபி டி வில்லியர்ஸ்.! நடு ஸ்டெம்பை பறக்கவிட்டு தட்டி தூக்கிய தமிழக வீரர்.!



natarajan got ABD wicket

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று  நடக்கும் நாக் அவுட் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும். இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதனையடுத்து பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினார். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே விராட் 6 ரன்கள் எடுத்தநிலையில் ஹோல்டர் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து படிக்கல்லும் 1 ரன் எடுத்தநிலையில் ஹோல்டர் ஓவரில் அவுட் ஆனார். இதனையடுத்து பின்ச் 30 பந்துகளில் 
32 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

abd

இதனையடுத்து பெங்களூரு அணியின் நம்பிக்கை நாயகன் ஏபிடி நிதானமுடனும் சற்று ஆதிரடியாகவும் ஆடி பிப்டியை கடந்தார். அவர் 43 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தநிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழக வீரர் நடராஜன் போல்ட் ஆகினார். இதனையடுத்து பெங்களூரு அணி தடுமாறியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டும் எடுத்து சந்ரசர்ஸ் அணிக்கு 132 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து உள்ளது.