#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
10 வருடங்களுக்கு பிறகு இதுவே முதல்முறை.! இரு இளம் வீரர்களை களமிறக்கிய இந்திய அணி.! அனல்பறக்கும் 2-வது டெஸ்ட்.!
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில் 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில்T20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தநிலையில், இந்திய அணித்தலைவர் விராட் கோலி, தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு அணியில் இருந்து விடுபட்டுள்ளார். அதேபோல் காயம் காரணமாக முகமது ஷமி சிகிச்சையில் உள்ளார். இதனையடுத்து விராட் கோலி, முகமது ஷமிக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் இடம்பெற்றுள்ளனர்.
முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பிய பிரித்வி ஷா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா வெளியேற்றப்பட்டு அவர்களது இடத்திற்கு பதிலாக சுப்மான் கில், ரிஷாப் பண்ட் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். சுப்மான் கில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இருவரும் டெஸ்டில் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர். வெளி நாட்டு மண்ணில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட இந்திய வீரர்கள் ஒரே டெஸ்டில் அறிமுகம் ஆவது 2011-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்நிகழ்வாகும்.