தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இந்திய அணி அபார பந்துவீச்சு! 235 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து
இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று துவங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்திய அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய துவங்கின.
லாதம் மட்டும் அரைசதம் விளாசினார். ஒன்பதாவது வீரராக களமிறங்கிய ஜெம்மீசன் 49 ரன்கள் எடுத்தார். 73.1 ஒவர்களில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியின் முகமது சமி 4, பும்ரா 3, ஜடேஜா 2, உமேஷ் யாதவ் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் மயங் அகர்வால் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்துள்ளது. பிரிதிவ் ஷா மற்றும் புஜாரா களத்தில் உள்ளனர்.