தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அந்த பையன் தோனி மாதிரி இல்ல..!! தோனியவே மிஞ்சுற மாதிரியான ஆளு..!! இளம் வீரரை புகழ்ந்துதள்ளிய பார்த்தீவ் படேல்...
இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் குறித்து பெருமையாக பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல்.
இந்த மாதம் 9 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபில் போட்டிகளை முன்னிட்டு அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 9 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணியும், 10 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டானாக செயல்பட்டுவந்த ஷ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக ஐபில் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக, ரிஷப் பண்ட் அடுத்த தோனி எனவும், தனி ஆளாக அவர் அணியை வழிநடத்தும் அளவுக்கு மிக சிறந்தவர் எனவும் ரிஷப் பண்ட் குறித்து வீரர்கள் புகழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கூறும்போது, "எம்.எஸ். தோனியுடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிட்டு எழும் கருத்துக்களால், பண்ட் அதிக சுமைகளை எதிர்கொள்கிறார். இதற்காக அவர் தோனியை போல் ஆக முயற்சிக்க வேண்டாம்.
ரிஷப் பண்ட் நினைத்தால் தோனியை விட மிக சிறந்த வீரராக, ஒற்றை ஆளாக அணிக்கு வெற்றியைத் தேடி தர முடியும்" என பார்த்தீவ் படேல் கூறியுள்ளார். நடந்து முடிந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம், இங்கிலாந்து அணியுடனான போட்டிகளில் ரிஷப் பண்ட் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, செம பார்மில் இருப்பதால், வரவிருக்கும் ஐபில் போட்டியிலும் அவரது பங்களிப்பு பிரமாதமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.