மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படியா அவுட் ஆகுறது.!! கொடுமையிலும் கொடுமை.! உச்சகட்ட கோபத்தில் வெளியேறிய புஜாரா.! வைரல் வீடியோ.!
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்ம் மைதானத்தில் இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 2-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 190.1 ஓவர்களில் 578 ரன்கள் எடுத்த நிலையில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடங்கியது. இந்திய அணியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.
ரோகித் சர்மா 6 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக சுப்மன் கில் 29 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி 11 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். ரஹானே 1 ரன் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களுடன் விளையாடி வருகிறது. அப்போது ஆடுகளத்தில் ரிஷப் பன்ட் 54 ரன்களுடனும், புஜாரா 53 ரன்களுடனும் விளையாடி வந்தனர்.
புஜாரா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டிக் கொண்டிருந்த போது, 73 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பார்தவிதமாக அவுட் ஆனார். டாம் பெஸ் வீசிய ஓவரில், லெக் திசையில் அடித்த பந்து ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த பீல்டர் மீது பட்டு, அப்படியே அருகில் இருந்த பீல்டர் ரோரி ஜோசப் பர்ன்ஸ் அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத புஜாரா கடும் கோபத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.