ரஷீத் கானை செமயா வெச்சு செஞ்ச இங்கிலாந்து அணி! 3வது இடத்தில் இருக்கும் ரஷீத் கான் படைத்த மோசமான சாதனை



rashid khan 110 runs conceded in 9 overs

இங்கிலாந்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் 9 ஓவர்கள் வீசி 110 ரன்கள் கொடுத்துள்ளார்.

இன்று நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் அதிகபட்சமாக 148 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி சர்வதேச ஒருநாள் அரங்கில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. 

wc2019

இங்கிலாந்து அணியின் சாதனைகள் ஒருபுறமிருக்க ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரசித்தான் வேதனையான மோசமான சாதனை ஒன்றை இந்த உலகக் கோப்பை போட்டியில் அரங்கேற்றியுள்ளார். இந்த போட்டியில் 9 ஓவர்கள் மட்டுமே வீசிய ரஷீத் கான் 110 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அவரது ஓவரில் மட்டும் இங்கிலாந்து அணி வீரர்கள் 11 சிக்ஸர்களை விளாசினர்.

உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த ஒரு பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரஷித் கான். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். சர்வதேச அரங்கில் தென் ஆப்பிரிக்க அணியில் லீவிஸ்(113) மற்றும் பாகிஸ்தான் அணியில் வகாப் ரியாஸ்(110) ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். இவர்கள் 10 ஓவர்கள் வீசி அந்த இடத்தை பிடித்தனர். ஒருவேளை ரஷீத் கான் 10 ஓவர்கள் வீசி இருந்தால் அவர்களது சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்திருப்பார்.



இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ள ரஷீத் கான் சர்வதேச பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டியில் மூன்றாம் இடத்திலும், டி20 போட்டியில் முதலிடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் அனைத்து பேட்ஸ்மேன்களையும் தனது சுழற்பந்துவீச்சால் திணறடித்து வந்த ரஷீத் கானுக்கு இந்த போட்டி மிகவும் சோதனையாய் அமைந்துவிட்டது.