தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அனைவரும் எதிர்பார்த்த வாழ்வா.? சாவா.? ஆட்டம்.! ஆரம்பத்திலே பெங்களூரு அணிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று நடக்கும் நாக் அவுட் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடத்தில் இருந்த அணிகளான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும். இந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.
இதனால் இந்த போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் இரு அணியும் களத்தில் இறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தயாரானது.
பெங்களூரு அணியின்துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினார். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே விராட் 6 ரன்கள் எடுத்தநிலையில் ஹோல்டர் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து படிக்கல்லும் 1 ரன் எடுத்தநிலையில் ஹோல்டர் ஓவரில் அவுட் ஆனார். தற்போது ஏபிடி மற்றும் பின்ச் இருவரும் ஆடிவருகின்றனர். தற்போது ஐந்து ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து 23 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி ஆடிவருகிறது. பெங்களூரு அணியில் விராட் மற்றும் படிக்கல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ஆர்சிபி ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.