#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!
டெஸ்ட் போட்டிகளில் ஷிகர் தவான், கே.எல்.ராகுல் மற்றும் பிருத்வி ஷா ஆகியோருடன் இணைந்து ரோஹித் சர்மா முதன்முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சதம் அடித்த 4 வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே துவக்க வீரராக முத்திரை பதித்தார் ரோஹித் சர்மா. ஆம், அதிரடியாக ஆடி சதம் அடித்த ரோஹித் சர்மா, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததோடு பல்வேறு சாதனைகளையும் செய்தார். அதில் முக்கியமானது, சொந்த மண்ணில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர் என்பது. டெஸ்ட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் தான் இதுநாள் வரை இந்த சாதனையையும் வைத்து இருந்தார்.
டான் பிராட்மேன் தன் சொந்த மண்ணில் (ஆஸ்திரேலியா) 50 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 4322 ரன்கள் குவித்து, பேட்டிங் சராசரியாக 98.22 வைத்துள்ளார். அதை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் 115 ரன்கள் அடித்து இருந்த போது, இந்திய மண்ணில் 15 இன்னிங்ஸ்களில், ரோஹித் நான்கு சதங்கள் மற்றும் ஐந்து அரைசதங்கள் உட்பட 884 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 98.22. இதன் மூலம், டான் பிராட்மேன் சராசரியை சமன் செய்தார். அதன் பின்னும் ரோஹித் சர்மா தொடர்ந்து ரன் குவித்து, அவரது சராசரியை முந்தினார்.