Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
நேற்றைய ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்த ரோஹித் சர்மாவின் எளிமையான பேச்சு!
உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா.
நேற்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி, 7 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ஓட்டங்களும், திரிமன்னே 53 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதனையடுத்து 265 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 103 ஓட்டங்களும், கே.எல்.ராகுல் 111 ஓட்டங்களையும் எடுத்தனர். நேற்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம், உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித்.
நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது. விருதினை வாங்கிய பின் பேசிய ரோஹித், நான் இந்த சாதனையை நினைத்து ஆடவில்லை. வழக்கம்போல எனது ஆட்டத்தில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். ஒவ்வொரு போட்டியையும் புதியதாகவே நான் பார்க்கிறேன்.