அச்சுறுத்திய அக்தர்..!! நடுங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஓபன் டாக்..!!



shewag-open-talk-about-akthar

1997 முதல் 2007 வரை 10 ஆண்டுகள் வேகப்பந்து வீச்சு என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஒரே நபர் சோயிப் அக்தர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த இவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அனைவராலும் பட்டப்பெயர் வைத்து அழைக்கப்பட்டார்.

இதற்கு காரணம் இவரது அதிவேகமான யார்க்கர் பந்துவீச்சு தான். அந்த காலகட்டத்தில் இவருடைய பந்துவீச்சுக்கு அஞ்சாத பேட்ஸ்மேன்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வந்தார். இவர் கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு முறை 161.3 கிலோமீட்டர் (100.2 mph) வேகத்தில் பந்து வீசி உலக சாதனை நிகழ்த்தியவர். இவர் உயிர் துடிப்பற்ற ஆடுகளத்தில் கூட யார்கர் வகைப்பந்துகள் மற்றும் கூர்மையான துள்ளி எழும் வகைப்பந்துகளை வீசும் திறமை படைத்தவர்.

shoib akthar

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க மற்றும் அதிரடி ஆட்டக்காரரான சேவாக் அக்தரை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது,

``நான் ஒரு பந்துவீச்சாளரைக் கண்டு பயந்தேன் என்றால், அது சோயப் அக்தர்தான். அவர், எந்தப் பந்தில் காலில் காயம் ஏற்படுத்துவார், எந்தப் பந்தில் தலையைப் பதம் பார்ப்பார் எனத் தெரியாது. நிறைய பவுன்சர்கள் வீசி என் தலையை அக்தர் காயப்படுத்தியுள்ளார். பலமுறை அவரது பந்துவீச்சைக் கண்டு பயந்துள்ளேன். அதேநேரம், அவரின் பௌலிங்கை நொறுக்குவது தனி மகிழ்ச்சி" எனக் கூறினார்.

shoib akthar

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சேவாக். ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் மட்டும் அல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்து இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 

வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் உள்பட இவருக்கு பந்து வீச பல வேகப்பந்து வீச்சாளர்கள் பயந்த கதைகள் உண்டு. இந்நிலையில் தற்போது சேவாக் தான் பார்த்து பயந்த வீரரை பற்றி கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.