மைதானத்தில் தேசியகீதம் ஒலிக்கும் போது கண்கலங்கிய முகமது சிராஜ்.! அவரே கூறிய உருக்கமான காரணம்.!



siraj crying in stadium

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டி, T20 டெஸ்ட் தொடர் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது  டெஸ்ட் போட்டி  சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பொதுவாக போட்டி தொடங்குவதற்கு முன் வீரர்கள் மைதானத்தில் வரிசையாக நிற்கும்நிலையில், இருநாட்டின் தேசிய கீதங்களும் ஒலிக்கப்படும்.

அந்தவகையில், நேற்று இந்திய தேசியக் கீதம் ஒலித்தபோது, மெல்போர்ன் போட்டியில் அறிமுகம் ஆன இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தன்னை மீறி கண் கலங்கி அழுதார். இந்நிலையில் தேசியகீதம் ஒலிக்கும் போது தான் அழுததற்கான காரணம் குறித்து அவர் போட்டி முடிந்த பின் கூறினார்.

போட்டி முடிந்தபிறகு அவர் பேசுகையியல், தேசியகீதம் ஒலிக்கையில் தன் தந்தையின் நினைவு வந்து விட்டதால் உணர்ச்சியின் வெளிப்பாடாக அழுது விட்டதாக தெரிவித்தார். ஆஸ்திரேலியா தொடருக்கான அணியில் தேர்வான போது அவரது தந்தை ஹைதராபாதில் காலமானார். ஆனாலும் தந்தையின் இறப்புக்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்றும் அப்படி விளையாடி கிடைக்கும் வெற்றியை அவருக்கு அஞ்சலியாக செலுத்த வேண்டும் என்று தொடருக்கு முன்னர் சபதம் ஏற்றுக் கொண்டார்.

அதேபோல், அவர் பங்கேற்ற இரண்டாவது போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வெற்றியை தேடித்தந்தார். நேற்றைய போட்டியிலும் முக்கிய வீரரான வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேசியகீதம் ஒலிக்கும் போது சிராஜ் கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.