என்ன நடந்தது..? கோவமாக சக வீரரின் கழுத்த வேகமாக பிடித்து இழுத்த இந்திய அணி வீரர்.. வைரல் வீடியோ.



Siraj holds Kuldeep yadav neck viral fight video

இந்திய அணி வீரர் சிராஜ் சக வீரர் குல்தீப் யாதவ்வின் கழுத்தை வேகமாக பிடித்து இழுக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. சென்னையில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் 578 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பாக பும்ரா மற்றும் அஸ்வின் இருவரும் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் எடுத்து அணியின் எண்ணிக்கையை வலுவாக்கினார்.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் மோதிக்கொள்வதுபோன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இவர்கள் இருவரும் இந்த போட்டியில் இடம்பெறவில்லை என்றாலும், முதல் நாள் ஆட்ட நேரம் முடிந்து இந்திய அணி வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூம் திரும்பியபோது சிராஜ் கோவமாக குல்தீப் யாதவ்வின் கழுத்தை வேகமாக பிடித்து இழுக்கிறார்.

உண்மையில் இவர்கள் இருவர்க்கும் இடையே என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியவில்லை. எனினும் இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் இதுவரை பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாததால், விளையாட்டாக இருவரும் சண்டை போட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.