ஆட்டோ ஓட்டி மகனை வளர்த்த தந்தை.. அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மறுத்த மகன்.. அவர் சொன்ன நெகிழ்ச்சி காரணம்



Siraj refused to participate in his father funeral

தந்தை உயிரிழந்த நிலையிலும் அவரது இறுதி சடங்கில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து இந்திய அணிக்காக விளையாடுவதாக கூறியுள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் உள்ள வீரர்களில் முகமது சிராஜும் ஒருவர். இவர் தற்போது நடந்து முடிந்த ஐபில் போட்டியில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிதான் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடுவதற்கு சிராஜ் உள்ளிட்ட அனைத்து இந்திய அணி வீரர்களும் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றுலநிலையில் அங்கு கொரோனா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே முகமது சிராஜின் தந்தை இந்தியாவில் உயிரிழந்த சம்பவம் அவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா தனிமை படுத்துதலில் இருப்பதால் சிராஜ் இந்தியா வர வாய்ப்பு இல்லை என்றும், தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியாது எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் முகமது சிராஜ் இந்தியா திரும்பவும், தந்தையின் இறுதி சடங்கில் அவர் பங்கேற்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக கூறியும், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சிராஜ்.

தான் இந்திய அணிக்காக விளையாடவேண்டும் என்பதே எனது தந்தையின் கனவு, அதனால் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இருப்பதே உகந்தது என முகமது சிராஜ் கூறியுள்ளார். சிராஜின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டு தனது மகனை வளர்த்து இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

தந்தை உயிரிழந்தபோதும் நாட்டுக்காக விளையாடவேண்டும் என்ற சிராஜின் இந்த முடிவு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.