தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
முதலிடத்தில் இருந்த மும்பை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் கெத்தாக நுழைந்தது சன்ரைசர்ஸ்.!
2020 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஆரம்பத்தில் நிதானமாக ஆடியது.
துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா சந்தீப் ஷர்மா வீசிய மூன்றாவது ஓவரில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய டி காக் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தநிலையில் போல்டு ஆனார். இதனையடுத்து களமிறங்கி சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 36 ரன்னிலும், இஷான் கிஷன் 33 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து களமிறங்கிய மும்பை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய பொல்லார்ட் சிறப்பாக ஆடி மும்பை அணியை மீட்டெடுத்தார். பொல்லார்ட் 41 ரன்களில் போல்டு ஆனார்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களான டேவிட் வார்னரும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் இறங்கி 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது சன்ரைசர்ஸ். வார்னர் 85 ரன்களுடனும், விருத்திமான் சஹா 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்றைய ஆட்டத்தின் வெற்றியால் சன்ரைசர்ஸ் அணி 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.