தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்அணியின் வெறித்தனமான ஆட்டம்.! சுக்கு நூறாக நொறுங்கிய டெல்லி அணி.!
ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீஸனின் 47வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேற்று மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடியது. கடைசி ஆட்டத்தில் கவனக்குறைவால் தோல்வியடைந்த சன் ரைசர்ஸ் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடியது சன் ரைசர்ஸ் அணி. துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சகா இருவரும் சிறப்பாக ஆடினர்.
அதிரடியாக ஆடிய கேப்டன் டேவிட் வார்னர் 34 பந்துகளுக்கு 66 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய மணீஷ் பாண்டே சிறப்பாக ஆடி அவரும் அவரது பங்கிற்கு 31 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை ஆடினார். மிகவும் அதிரடியாக ஆடிய விருத்திமான் சகா 45 பந்துகளுக்கு 87 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக ரஹானே மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். ஷிகர் தவான்ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினார். இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் ரிஷாப் பாண்ட் மட்டும் அதிகபட்சமாக 36 எடுத்தார். இறுதியில் டெல்லி அணி 19 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஹைதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 3 விக்கெட்டுகளும், நடராஜன், சந்திப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹொல்டர், நதீம் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். நேற்றைய ஆட்டத்தில், 88 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றிபெற்றது.