மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டி20 உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
2022ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை மற்றும் தேதிகளை ஐசிசி அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
2022ம் ஆண்டுகான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் கோலகலமாக தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தமாக 29 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 45 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆஸ்திரேலியாவில் மொத்தம் 7 மைதானங்களில் இந்த தொடர் நடைபெறுகிறது.
இந்த முறை நமிபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்று வரவேண்டிய சூழலில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்கும் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.