மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இலங்கைக்கு எதிரான தொடரில் தேர்வான ஒரே தமிழக வீரர்..! அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் கதை என்ன ஆச்சு?
வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான T20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. T20 அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் ஒரு நாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் செயல்பட உள்ளனர்.
இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணியில் தமிழகத்திலிருந்து ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே தேர்வாகியுள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான தொடர்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டார்.
அதே சமயத்தில் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது. ஆனால் சமிபகாலமாக சிறந்த ஆண்டரவுண்டராக செயல்பட்டு வரும் அஸ்வின் இந்தத் தொடரில் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.