தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வாழ்வா சாவா! இக்கட்டான சூழ்நிலையில் இன்று இந்தியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து
சொந்த மண்ணில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்குள் முன்னேறுமா என்ற இக்கட்டான சூழ்நிலையில் இங்கிலாந்து அணி இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது.
ஆரம்பத்திலிருந்தே புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருந்த இங்கிலாந்து அணி முதல் முறையாக நேற்று பாகிஸ்தான் அணியின் வெற்றியால் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 7 போட்டிகளில் ஆடியுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
8 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வென்றதுடன் மழையின் காரணமாக ஒரு புள்ளி பெற்றதால் 9 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி தற்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி பாகிஸ்தானை பின்னுக்குத்தள்ளி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் எனில் இன்று இந்தியாவுடன் நிச்சயம் வென்றே தீரவேண்டும்.
ஒருவேளை என்று இங்கிலாந்து இந்தியாவுடன் தோல்வி அடைந்து பாகிஸ்தான் அடுத்த போட்டியில் பங்களாதேஷை வென்றால் பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேற்றப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் இங்கிலாந்து அணி இன்று இந்தியாவை எதிர்கொள்கிறது.
கடந்த நான்கு போட்டிகளாக ஓய்வில் இருந்த இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் இந்த போட்டியில் ஆடுவார் என்ற செய்தி இங்கிலாந்திற்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதே நேரத்தில் வேகப்பந்துவீச்சாளர் சோப்ரா ஆச்சர் ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.