"எம்எஸ் தோனி - வெறும் பெயரல்ல" தோனியின் புகழை ஒரே வீடியோவில் வெளியிட்ட ஐசிசி!



Video about ms dhoni

இந்தியாவின் கிரிக்கெட்டையே மாற்றி அமைத்தவர்; இந்நியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்; இந்த யுகத்தின் விலைமதிப்பில்லா சொத்து; எம்எஸ் தோனி என்பது வெறும் பெயரல்ல, என தோனியின் புகழை பறைசாற்றும் வீடியோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது.

37 வயது நிரம்பிய மகேந்திர சிங் தோனி 2004 ஆம் ஆண்டு முதல் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வருகிறார். 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக தகழ்ந்தார். இவரது தலைமையில் இந்திய அணி அனைத்து விதமான ஐசிசி தொடர்களிலும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. உலக அளவில் இந்தியாவை தலைசிறந்த அணியாக மாற்றிய பெருமை தோனிக்கு உண்டு.

wc2019

எப்பேற்பட்ட ஆட்டத்தையும் இந்தியாவிற்கு சாதகமாக மாற்றுவதில் கைதேர்ந்தவர் தோனி என்ற புகழ் உலகம் முழுவதும் பரவியது. தி பெஸ்ட் பினிஷ்சர் என்ற அடைமொழியும் தோனிக்கு பொருத்தமாக அமைந்தது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றிபெற செய்த அந்த கணம் யாராலும் மறக்க முடியாது.

wc2019

பேட்டிங்கில் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் தலைசிறந்தவர் மகேந்திர சிங் தோனி. எப்பேற்பட்ட பேட்ஸ்மென்களையும் அசால்டாக வெளியேற்றிவிடுவார் தோனி. இத்தகைய புகழ்மிக்க தோனிக்கு கண்டிப்பாக 2019 கோப்பைத் தொடர்தான் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும். ஆனால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.

wc2019

இந்நிலையில் வாழ்நாள் சாதனையாளர் தோனியை கௌரவிக்கும் வகையில் எதிரணி வீரர்கள் தோனியை பற்றி புகழ் பாடும் வீடியோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது.