அடுத்தடுத்து வந்த வீரர்கள் செய்ய தவறியது என்ன? தோல்வி குறித்து விராட் கோஹ்லி விளக்கம்



virat kholi says about loss in 4th test

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. பௌலிங்கில் மிக சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இந்த ஆட்டத்தில் வென்று தொடரை நிச்சயம் சமன் செய்யும் என்று அனைவரையும் எதிர்பார்க்க வைத்தது. 

ஆனால் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 184 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. 

4th test

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற முன்னிலையில் இங்கிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது இனிங்சின் ஆரம்பத்திலே இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. 22 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ரஹானே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அரை சதம் அடித்த க்ஹோலி மெயின் அலி பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாண்டிய மற்றும் பண்ட் வந்த வேகத்திலே நடையை கட்டினர். பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும், பண்ட் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்தியாவின் தோல்வி உறுதியானது.

4th test

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. 

பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 184 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

4th test

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேசியதாவது, “இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடியது. குறிப்பாக மூன்றாவது இன்னிங்ஸில் அவர்கள் அபாரமாக பேட்டிங் செய்தனர், அதன் காரணமாகவே அவர்களால் இந்த இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. 245 ரன்கள் இலக்கு என்பது சவாலானது தான். இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற 50 சதவீதம் வாய்ப்பும், தோல்வியடைய 50 சதவீதம் வாய்ப்பும் உள்ளதாக நேற்று இரவே நினைத்தோம். இங்கிலாந்து அணி எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. ரஹானேவும் நானும் சிறப்பாக விளையாடினோம், ஆனால் அடுத்தடுத்து வந்த வீரர்கள் அதனை செய்ய தவறவிட்டனர். முதல் இன்னிங்ஸில் புஜாராவின் ஆட்டம் தனித்துவமானது. இதனையும் பாசிட்டிவாக எடுத்து கொண்டு தோல்வியில் இருந்து பாடம் கற்றுகொள்வோம்” என்றார்.