மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விராட் கோலிக்கு ராசியே இல்லை.! நியூசிலாந்திடம் தோல்வியடைந்ததற்கு விராட் கோலி சொன்ன காரணம்.!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நேற்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும் என்ற சூழ்நிலை இருந்தது. இந்தநிலையில் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங்கை செய்த இந்திய அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.3 ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவின் தோல்விக்கு பிறகு விராட் கோலிக்கு கேப்டன் ராசி தோனிக்கு போல இல்லை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய விராட், பேட்டிங் அல்லது பந்துவீச்சில் நாங்கள் போதிய அளவு தைரியமாக இருந்தோம் என்று நான் நினைக்கவில்லை. இதே போல் பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை. ஆனால் எங்களை விட நியூசிலாந்து வீரர்கள் தீவிரத்துடன் செயல்பட்டனர் என தெரிவித்துள்ளார்.