#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒருவர் ஓய்வினை அறிவித்ததால் இப்படி ஒரு முடிவா? வாசிம் அக்ரமின் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பணி சுமை காரணமாகவும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனத்தை செலுத்துவதற்காகவும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் முடிவு சர்வதேச ஒரு நாள் போட்டியின் எதிர்காலம் குறித்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் சர்வதேச ஒரு நாள் போட்டிகளை கைவிடுவதே சாலச் சிறந்தது என கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் விளக்கம் அளித்துள்ள அவர் 'சமீப காலங்களில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆர்வத்தை விட ஒருநாள் போட்டிகளில் மிகக்குறைவாகவே உள்ளது.
இதற்கு காரணம் நான்கு மணி நேரம் மட்டுமே நடைபெறும் டி20 போட்டியில் எந்நேரமும் பரபரப்பு இருந்து வருகிறது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் முதல் பத்து ஓவர் மட்டும் கடைசி பத்து ஓவர் மட்டுமே விறுவிறுப்பாக உள்ளது. இதனால் ஒரு சில நாடுகளில் ரசிகர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து கூட ஒருநாள் போட்டிகளை பார்ப்பதில்லை.
இத்தகைய சூழல் போட்டிகளை நடத்தும் நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக நஷ்டத்தையே ஏற்படுத்துகிறது. எனவே சர்வதேச ஒருநாள் போட்டிகளை கைவிடுவதே நல்லது' என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.