கிரிக்கெட்டுக்கு பதில் பேசாம நீச்சல் போட்டி நடத்துங்க; ஐசிசியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!



world-cup-2019---ind-vs-nwz---rain-abonded---fans-comme

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் நேற்று நாட்டிங்காமில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுவதாக இருந்த 18 ஆவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

கடந்த இரண்டு நாட்களாகவே நாட்டிங்காமில் வெளுத்து வாங்கும் மழை நேற்று போட்டி துவங்குவதற்கு முன்னே பெய்ய ஆரம்பித்தது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. சிறிது நேரம் மழை நின்றதும் நடுவர்கள் மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சிறிதாக பெய்துகொண்டிருந்த மழை கனமழையாக மாறியது. இதனால் போட்டியினை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.



 

இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஒரு தனிப்பட்ட அணி வென்றுள்ளதை விட மழை தான் அதிகமுறை வென்றுள்ளது என கூற வேண்டும். இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை சேர்த்து இதுவரை 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன.

இதனால் இந்த உலகக்கோப்பை தொடரில் அணிகளில் புள்ளிப்பட்டியலை நிர்ணயிப்பதில் மழையின் பங்கு அதிகமாகவே உள்ளது. எனவே எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்பதனை கணிப்பதில் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.



 

இந்நிலையில் இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரை பருவமழை காலத்தில் இங்கிலாந்தில் தொடங்கிய ஐசிசிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் காமெடியாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதில் கிரிக்கெட் தொடருக்கு பதிலாக ஐசிசி நீச்சல் போட்டி நடத்தலாம் என வறுத்தெடுத்து வருகின்றனர்.