கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
இந்தியா சிறப்பான பந்துவீச்சு; முகமது ஷமியின் வேகத்தில் வீழ்ந்த முன்னணி வீரர்கள்.!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறும் 34-ஆவது லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வின் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களம் இறங்கினர். இருவரும் நிதானமாகவே ரன்களை சேகரித்தனர். ஆனால் ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 48 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தது வெளியேறினார்.
அடுத்து அடுத்து களம் இறங்கிய விஜய் சங்கர், கேதர் ஜாதவ் இருவரும் சொற்ப ரன்களில் விரைவாக ஆட்டமிழந்ததனர். கேப்டன் விராட் கோலி மட்டும் வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசியில் அவரும் 72 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
6 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனி, ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக ஆடி ஓரளவு கை கொடுத்தனர். பாண்டியா 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி வரை களத்தில் இருந்த தோனி 56 ரன்கள் எடுத்தார். முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை எடுத்தது.
269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கினார்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்கள் கிறிஸ் கெயில், சுனில் அம்பரிஷ். துவக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான முகமது சமி, பும்ரா இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை தங்களுடைய வேகப்பந்து வீச்சு மூலம் திணறடித்தனர்.
இதனால் முகமது ஷமியின் பந்துவீச்சில் கிரிஸ் கெயில், சாய் ஹோப் இருவரும் அடுத்தடுத்து தங்களுடைய விக்கெட்டுகளை இழந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருக்கிறது.