சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
உலகக்கோப்பை 2019: அணிகளின் தற்போதைய புள்ளி விவரம்! எந்த அணி எந்த இடம்? இதோ!
உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கோப்பையை வெல்ல மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகிறது. 14 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. இதன்மூலம் இந்தியா புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி நான்காவது இடத்தில் உள்ளது.
முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் என்பதால் மற்ற அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தலா 3 புள்ளிகளுடன் இலங்கை அணி 5 வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 6 வது இடத்திலும் உள்ளது.
இரண்டு புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 7 வது இடத்திலும், பங்களாதேஷ் அணி இரண்டு புள்ளிகளுடன் 8 வது இடத்திலும் உள்ளது. மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத தென்னாபிரிக்க அணி 9 வது இட்டதிலும், ஆப்கானிஸ்தான் அணி 10 வது இடத்திலும் உள்ளது.