சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
நாளை.. வெள்ளிக்கிழமை.. பணமழை கொட்ட வேண்டுமா? இதை செய்தால் போதும்.!

மகாலட்சுமிக்கு முக்கிய நாளாக இருப்பது, வெள்ளிக்கிழமை தான். மற்ற நாட்களை காட்டிலும் இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
எனவே, வெள்ளிக்கிழமையில் ஒரு காரியத்தை தொடங்கினால் அது வெற்றியை தரும் என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து, மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
வழிபடும் முறை
வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் வெட்டி வேர் துண்டை எடுத்துக் கொள்ளவும்.
அதை திரியுடன் சேர்த்து இணைத்து அகல் தீபத்தில் வைத்து நெய் ஊற்றி தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
அதன் பின், வீட்டில் இருக்கும் மகாலட்சுமி படத்தை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து உங்கள் வேண்டுதலை வைக்க வேண்டும்.
இவ்வாறு, தவறாமல் 24 வெள்ளிக்கிழமைகள் பூஜை செய்தால் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம், கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.
குடும்பத்தில் உறவுகள் இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.