தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
திருப்பதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை; மீறினால் ரூ.25,000 வரை அபராதம் என எச்சரிக்கை.!
திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அக்டோபர்-2 தேதி முதலே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் அமைந்திருக்கும் திருமலையிலும் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான வெளியீட்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
திருமலையில் வரும் நவம்பர் 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. உத்தரவை மீறுவோருக்கு ரூ. 5000 முதல் ரூ. 25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.
திருமலையில் இயங்கும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமும் ரத்து செய்யப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தேவஸ்தானத்தில் இந்த முடிவுக்கு பக்தர்கள், கடை உரிமையாளர்கல் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த உத்தரவை திருமலைக்கு வரும் அனைவரும் கவனத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.