டிசம்பரில் இந்த 5 ராசிகாரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.!? என்ன காரணம்.!



Astrology news about five zodiac signs

சுக்ரனின் இடப்பெயர்ச்சி

டிசம்பர் மாதம் தொடங்கப் போகிறது. இந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் முடியப்போகிறது. வருடம் முழுவதும் பல கஷ்டங்களை சந்தித்த பல ராசிக்காரர்கள் டிசம்பர் மாதம் எப்படி இருக்கும் என்று பதட்டத்தில் இருந்து வருவார்கள். வரப்போகும் டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதால் 12 ராசிகளிலுமே தாக்கம் ஏற்படும்.

சுக்கிரன் இடர்பெயர்ச்சி செய்வதால் சில ராசிகளில் நன்மையும் சில ராசிகளில் கஷ்டமான சூழ்நிலையும் ஏற்படலாம். டிசம்பர் மாதத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகளை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: இந்த 3 ராசிக்கு.. 2025-ல் சொர்க்க வாழ்க்கை ஆரம்பம்.. இனி எல்லாமே வெற்றிதான்.!

astrology

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

1. மிதுனம் - மிதுன ராசியில் பலர் சொந்த தொழில் செய்து வருவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. செலவு அதிகமாகவும், வருமானம் குறைவாகவும் இருந்து வரும். இதனால் மனப்பதட்டம், குடும்பத்தில் சண்டை, சச்சரவு போன்றவை ஏற்படும்.
2. கடகம் - டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் இடப்பெயர்ச்சி செய்வதால் கடக ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் அளவிலும், மனதளவிலும் சில பாதிப்புகள் ஏற்படலாம். குறிப்பாக எலும்பு மற்றும் தோல் சார்ந்த நோய்கள் ஏற்படும்.
3. விருச்சிகம் -எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். சேமிப்புகள் குறைந்து போகும். உடல் அளவில் பாதிப்புகள் ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் இருக்காது.
4. தனுசு - சுக்ரனின் இடப்பெயர்ச்சியால் எதிர்ப்பாராத செலவுகள் வந்து சேரும். டிசம்பர் 2 முதல் 28ஆம் தேதி வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம், சண்டை, சச்சரவு ஏற்படக்கூடும்.
5. கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இடப்பெயர்ச்சியால் குடும்ப வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் தொழிலில் செலவு அதிகரித்து வருமானம் குறையும். ஆனால் இதனை சவாலாக எடுத்து புதிய தொழில் திட்டங்களை முயற்சி செய்வதன் மூலம் நன்மை ஏற்படும்.

இதையும் படிங்க: இந்த ராசிகளுக்கு ஈஸியா இரண்டாவது திருமணம் நடக்குமாம்.! உங்கள் துணையின் ராசி இதுவா.?!