தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
செல்வம் செழித்து வளர உதவும் சுக்கிர வார பிரதோஷ வழிபாடு.!
பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அல்லது அமாவாசை தினத்தையடுத்து வரும் பிரயோதசி திதியில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளென்று கூறப்படுகிறது. அதே போல பிரதோஷ வேளை மாலை 4:30 மணி முதல், 6 மணி வரை. பிரதோஷ நேரம் என்று சொல்லப்படும் இந்த சமயத்தில், நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேறவும், கர்ம வினை நீங்கவும் வழிபாடு செய்தால், சிறப்பான பலன்களை நம்மால் பெற முடியும். அந்த விதத்தில், வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் வரும் பிரதோஷத்தின்போது நாம் செய்யும் பிரார்த்தனைகளுக்கு சிவபெருமான் உடனடியாக செவி சாய்ப்பாரென்று சிவபுராணம் கூறுகிறது.
இந்த பிரதோஷ தினத்தில் சிவ வழிபாடு செய்தால், நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய இன்னல்கள் அனைத்தும் நீங்கி சுபிட்சங்களை பெற முடியும் என்று முனிவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் இன்றைய தினம் சிவபெருமானோடு சேர்த்து, நந்திகேஸ்வரரையும் தரிசனம் செய்து, செவ்வரளி, வில்வம் ஆகிய அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். முடிந்தளவு பசியால் வாடுபவர்களுக்கு உதவி புரியலாம். பொதுவாக அனைத்து பிரதோஷங்களும் தனித்துவம் பெற்றவையாகும்.
இந்த பிரதோஷ காலத்தில் தான் சிவபெருமான் நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையே நடனமாடுவார். இந்த சமயத்தில் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண்பதற்காக முனிவர்களும் 33 கோடி தேவர்களும் ஒன்றுகூடி நின்று பக்தியோடு இந்த பிரதோஷ சமயத்தில் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்டு களிப்பார்கள் என்று ஒரு ஐதீகமிருக்கிறது.
பிரதோஷ சமயத்தில் மாலை வேளையில் வீட்டிலிருந்தபடியே ஓம் நமச்சிவாய என பஞ்சாட்சரம் உச்சரித்தால், இதுவரையில் நம்முடைய முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும் கர்ம வினைகள் அனைத்தும் தானாகவே விலகி விடுவதை நாம் அனுபவ பூர்வமாக உணர முடியும். நாம் இப்படி செய்வதால் மனமும், உடலும் ஆரோக்கியமாகயிருக்கும். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். நம்மை யாராவது எதிரிகளாக நினைத்திருந்தால், அவர்களாகவே நம்முடைய பாதையிலிருந்து விலகிச் சென்று விடுவார்கள்.
பிரதோஷம் என்றாலே சிறப்பு தான். ஆனாலும் இன்று சுக்கிரவார பிரதோஷம் அனுசரிக்கப்படுவதால், இந்த பிரதோஷ வழிபாடு சகலவிதமான செல்வங்களையும் நமக்கு வழங்கும். அதோடு சுக்கிர யோகத்தையும் கொடுக்கும் என்பது ஐதீகமாகவுள்ளது. பிரதோஷ சமயத்தில் அருகிலிருக்கின்ற ஆலயங்களில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளை மனதார தரிசனம் செய்து, நன்றாக பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால், நம்முடைய வாழ்வில் அனைத்து விதமான இன்னல்களும் நீங்கி நாம் மேன்மையடையலாம்.