தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
புரட்டாசியில் அசைவம் ஏன் சாப்பிட கூடாது?.. காரணங்கள் இதோ.!
திருமாலை வழிபட மிக உகந்த மாதமாக கருதப்படுவது புரட்டாசி மாதம் தான். இம்மாதத்தில் பக்தர்கள் திருமாலை வேண்டி விரதமிருந்து கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். மேலும் புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது அசைவம் சாப்பிடக்கூடாது என்பதாகும்.
12 மாதங்கள் விரதமிருந்து கோவிலுக்கு சென்றாலும் புரட்டாசி மாதத்தில் மட்டும் ஏன் அசைவ உணவை தவிர்க்கிறார்கள்? என்ற கேள்விக்கு, அறிவியல் ரீதியான காரணத்தை இந்த செய்திதொகுப்பில் காணலாம்.
புரட்டாசி மாதத்தில் காற்றும், வெயிலும் குறைந்து மழை தொடங்கும். பல மாதங்களாக வெயிலால் சூடான பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்கும். இதன் காரணமாக இம்மாதம் சூட்டை கிளப்பிவிடும் என்றும், வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது என்றும் கூறுவர்.
அந்த சமயத்தில் அசைவம் சாப்பிடுவது உடல்சூட்டை அதிகப்படுத்தி உடல்நலக்கோளாறை உண்டாக்கும். அத்துடன் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் அசைவத்தை நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்தனர்.
இது மட்டுமின்றி திடீர் வெப்பமாறுதல், சரிவர பெய்யாத மழை ஆகியவை நோய் கிருமிகளை உருவாக்குவதால் காய்ச்சல், சளி உள்ளிட்டவை அதிகரிக்கும். இதனால் புரட்டாசியில் விரதம் இருந்து அசைவத்தை தவிர்த்து, திருமால் கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.
ஆனால் காலம் செல்ல செல்ல இதற்கான காரணங்களை மூட நம்பிக்கைகளாகவும், கட்டுக்கதைகளாகவும் சிலர் மாற்றிவிட்டனர். மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே முன்னோர்கள் இதுபோன்ற செயல்களை செய்தனரே தவிர, வேறு எந்த விதமான காரணங்களுக்காகவும் கிடையாது. எனவே மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டு அறிவியல் ரீதியான உண்மையை அனைவரும் அறிய வேண்டும்.