பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
கடன் கொடுத்துட்டு அவதிப்படுறீங்களா?.. வராக்கடன் வசூலாக இப்படி செய்யுங்கள்..! பரிகாரங்கள் இதோ..!!
நாம் செல்வந்தராக இருக்கும்போது பெரிய தொகையை ஒருவரிடம் கடனாக கொடுக்கும்போது நமது சாதகத்தை சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அரசு உத்தியோகத்தில் இருக்கும் நபர்கள், தொழிலதிபர்கள் போன்றோரே பலரிடமும் பணத்தை கொடுத்து ஏமாந்து வருகின்றனர். பணம் கொடுத்தவர்கள் அசல் வந்தால் போதும் என்று நிலைமைகளிலும் இருக்கிறார்கள்.
எந்தவிதமான முகவரியும் இன்றி உறவினர்களே நாங்கள் பணத்தை பெருக்கி தருகிறோம் என்று கூறி, பின்பு அதனை வாங்கி ஏமாற்றிய நிகழ்வும் நடந்துகொண்டதாக இருக்கின்றன. லட்சங்களில் பணம் கொடுத்தாலும் சரி, ஆயிரங்களில் பணம் கொடுத்தாலும் சரி அதனை வசூல்செய்ய நமது நேரமும், காலமும் கூட காரணமாக அமைகிறது.
பெரியபணம் கொடுக்கும் போது ஜாதகத்தை பரிசோதனை செய்வது நல்லது. ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் தந்தையால் வராக்கடன் பிரச்சனை உருவாகும். அவர்கள் கௌரவத்திற்காக தந்தையின் கடனை அடைப்பார்கள். அதேபோல ஆறாம் அதிபதி பத்தில் இருக்கும் பட்சத்தில் தொழில்சார்ந்த நஷ்டம், கடன் அதிகரித்துக்கொண்டு செல்லும்.
திடீர் பயமும் உண்டாகும். இதனால் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கடனுக்கு பயந்து நோயும் வரலாம் மற்றும் பண இழப்பு ஏற்படும். வராக்கடன், பண இழப்பு ஏற்படும் காலமாக 6,8-ம் அதிபதி அல்லது 6,8-ல் நின்ற கிரகத்தின் திசை, புதன் திசை நடக்கும் காலங்களிலும் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி வக்கிரம் பெற்று தசை நடத்தும்போது மேஷம் மகரலக்னத்தை சேர்ந்தவர்களுக்கும் வராக்கடன் உண்டாகும்.
6,8-ம் அதிபதி லக்னத்தில் இருக்கும் நபர்களுக்கு 7-ம் அதிபதி 6, 8-ம் இடத்தில் சம்பந்தம் இருப்பவர்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் பிரதோஷம் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்தல், செவ்வாய்க்கிழமையில் பிரதோஷத்தில் சிவனுக்கு நல்லெண்ணெயில், சிவப்பு திரையிட்டு ஆறு விளக்கு ஏற்றி வழிபடுதல், சனிக்கிழமையில் பிரதோசதினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுதல் மூலமாக வராக்கடன்கள் வசூல் ஆகும்.