இன்றைய தினத்தில் விநாயகருக்கு இது ஒன்றை மட்டும் செய்ய மறந்துவிடாதீர்கள்!
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் பல இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து, அதற்கு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
விநாயகர் அவதரித்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம். இன்றைய தினத்தில் விநாயகருக்கு கொழுக்கட்டை, அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், சோளம், கம்பு போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். மேலும், அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ ஆகியவை படைத்தது வழிபட்டால் வினைகள் தீரும்.
இன்றைய தினத்தில் விநாயகருக்கு இது ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். அது என்னவென்றால் அருகம்புல் தான். அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளின் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். மேலும் எந்த ஒரு பூஜையின் போதும், இந்த அருகம்புல் இல்லாமல் பூஜை நடந்ததில்லை.
தடைபட்ட திருமணம், படிப்பு, வேலை, குழந்தைப் பேறு, வீடு கட்டுதல், உடல்நல கோளாறு என பல்வேறு காரணங்களுக்காக சதுர்த்தி விரதம் இருந்து முதற்கடவுளான விநாயகப் பெருமானை இன்றைய தினத்தில் தரிசித்தால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இந்த விநாயகர் சதுர்த்தியில் அவரது அருளை பெற்றிட வாழ்த்துக்கள்