மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன்.. சேலத்தில் பகீர் சம்பவம்.. படிக்க போவதாக கூறி நடந்த பயங்கரம்.!
பத்தாம் வகுப்பு பயின்று வரும் சிறுமியுடன் படிப்பதாக பெற்றோரை நம்ப வைத்த சிறுவன், தனிமையில் நெருங்கியதால் ஏற்பட்ட விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் வசித்து வரும் 15 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயில்கிறார். சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் சிறுவனுக்கு 15 வயது ஆகிறது, அவர் வேறொரு பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
அவரை மீட்ட பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தபோது, அங்கு சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது அம்பலமானது. பெற்றோர் சிறுமியிடம் கேட்டபோது, அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 15 வயது சிறுவனின் செயல் தெரியவந்தது.
சிறுவனும் - சிறுமியும் ஒரே வகுப்பு பயின்று வந்ததால், இருவரும் வீட்டில் ஒன்றாகவே படித்து வந்துள்ளனர். சிறுவன் பெரும்பாலும் சிறுமி வீட்டில் சென்று படிப்பது வழக்கம். அப்போது, இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு தனிமையில் இருந்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார் என்ற உண்மை உறுதியானது.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அதிகாரிகள் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.